Saturday, November 6, 2010

உத்தம புத்திரன் திரை விமர்சனம்.

திரைப் படத்தின் பெயர் : உத்தம புத்திரன்
தயாரிப்பாளர் : மோகன் அபராவ், தி.ரமேஷ்
இயக்குனர் : மித்திரன் ர.ஜவகர்
நடிகர்கள் : தனுஷ், ஜெனலியா, பாக்யராஜ், விவேக் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : விஜய் அன்டனி
ஒளிப்பதிவாளர் : பாலசுப்ரமணியம்

உத்தம Puththiran
யாரடி நீ மோகினி மாற்றம் குட்டி ஆகிய படங்களில் ஏற்கனவே தனுஷும் ஜவகரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். இப்போது தெலிங்கில் சூப்பர் ஹிட் ஆனா ரெட்டி எனும் படத்தின் தமிழ் பதிப்பில் இருவரும் இணைந்துள்ளனர். ரெட்டி படத்தின் தமிழ் மீள் தயாரிப்பான உத்தம புத்திரனில் காதல், நகைச்சுவை, குடும்பப் பாங்கு, செண்டிமெண்ட் என்பன மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன.

உத்தம புத்திரனில் தனுஷ் சிவா எனும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவனாக நடித்துள்ளார். தனது உறவுக்காரப் பெண்ணின் திருமணத்தன்று அவளது காதலனுடன் அவளை சேர்த்துவைத்ததால் சிவா வீட்டை விட்டு துரத்தப்படுகிறான். எனினும், அவனது மாமா ரகு சிவாவிற்கு உதவுகிறார். பின்னர் சிவா தனது நண்பனின் காதலுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு பூஜாவாக நடிக்கும் ஜெனிலியாவை தவறாக கடத்துகிறார்.

ஆனால் முன்னர் ஒருதடவை காரில் சென்ற பூஜாவை பார்த்தவுடனேயே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். ஆனால் பூஜாவை கடத்திய பின்னர் பூஜாவின் வீட்டில் அவளின் மாமாவின் சொத்திற்காக அவளை கல்யாணம் செய்ய வற்புறுத்துவது தெரியவருகிறது. பின்னர் பூஜா மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரினதும் மனதை வென்று பூஜாவை மணக்கிறார்.

தொடர்ச்சியாக அடிதடி மற்றும் காதல் படங்களில் நடித்துவந்த தனுஷ் உத்தம புத்திரனில் குடும்பப்பாங்கான பையனாக நடித்துள்ளார். தனுஷ் மற்றும் ஜெனீலியா தவிர்ந்த ஏனைய நடிகர்களும் தங்கள் பங்கை நன்றாக செய்துள்ளனர். பாக்யராஜ், அம்பிகா, விவேக், ரேகா மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். வில்லன் பாத்திரங்களும் நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளன. விவேக் உத்தம புத்திரனில் இமோசனல் ஏகாம்பரம் ஆக கலக்கியுள்ளார்.

உத்தம புத்திரன் பாடல் காட்சிகள் நன்றாக உள்ளன. இசையும் நன்றாக உள்ளது. குறிப்பிட்டுக் கூறக்கூடிய மறையான கருத்துக்கள் இருப்பதாக தெரியவில்லை.

கொடுக்கும் காசிற்கு பார்க்க கூடிய படம், உத்தம புத்திரன்.

ஆங்கிலத்தில் வாசிக்க விருப்பமா? இங்கே அழுத்துங்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

1 comment:

  1. //தனுஷ் மற்றும் ஜெனீலியா தவிர்ந்த ஏனைய நடிகர்களும் தங்கள் பங்கை நன்றாக செய்துள்ளனர். //

    படத்தின் மெயின் ரோலே இப்படியா... நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...