Friday, November 12, 2010

வடிவேலு பற்றி 10 விடயங்கள்.

வடிவேலு drawing 

வடிவேலு தனது அம்மாவை நேசிக்கிறார். படப் பிடிப்பு எதுவும் 2  நாட்களுக்கு இல்லாவிட்டால் அம்மாவை பார்க்க மதுரைக்கு ஓடிவிடுவார். அம்மாவுடன் 2  நாட்கள் இருந்து அவர் சமைக்கும் உணவை உண்டாலே நிம்மதியடைவார்.

வடிவேலு ஆடு, கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார். இட்லியும் சம்பலுமே அவருக்கு அதிகம் பிடிக்கும். இரவு உணவிற்கு சப்பாத்தி மட்டுமே சாப்பிடுவார்.

தனது சுவிப்ட் காரில் நீண்ட தூரம் பயணம் செய்வது வடிவேலுவிற்கு ரொம்ப பிடிக்கும்.

சொந்த ஊரிற்கு போக முடியாவிட்டால் படாபாயில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று மரங்களுடன் உரையாடுவார். இதிலிருந்து வடிவேலு தனது சொந்த ஊரிற்கு சென்ற சந்தோசத்தைப் பெறுவார்.

படங்களில் பலவித ஆடைகளில் வடிவேலு தோன்றினாலும், அவர் எளிமையான ஆடைகளையே அணிவார். சனிக்கிழமைகளில் கருப்பு உடுப்பும் வியாளக்கிழமைகளில் மஞ்சள் உடுப்பும் அணியும் பழக்கமுடையவர்.

தனது குறைகளை யாராவது கண்டுபிடித்துவிட்டால் 'என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே' என சொல்வார். இதனால் அவர் குறையை கண்டுபிடித்தவரும் சிரித்துவிடுவார்.

தனது நண்பர்களை அலுவலகத்திற்கு வரச் செய்து அவர்களுடன் சேர்ந்து கண்ணதாசன் MGR இற்காக எழுதிய பாடல்களை பாடும் பழக்கமுடையவர்.

இயக்குனர் சொல்வதை  கேட்டுக்கொண்டிருப்பார். ஆனால்  படப்பிடிப்பின் போது தனது சொந்த பாணியில் பேசிவிடுவார். இதனால் அங்கெ ஒரே சிரிப்பொலிதான்.

புதிய கருமங்களை தொடங்க முன்னர் தனது அலுவலகத்தில் 10 நிமிடங்கள் கண்ணை மூடி அய்யனாரை வழிபடும் பழக்கமுடையவர்.

தனது குடும்பத்தினர் தன்னுடன் எவ்வாறு பேசுவர் என தனது நண்பர்களுக்கு மிமிகிரி பண்ணிக் காட்டுவார். இது நண்பர்களுக்கு மட்டும்.

To read Article in English : Happy Reading

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...