Thursday, September 30, 2010

"சந்திரமுகி" பேயாகிய நடிகை.


கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் படப்பிடிப்பு மதுரையில் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் தேஜ் மற்றும் நட்சத்ரா நடிக்கின்றனர். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை நடிகைக்கு கலை வந்து விட்டதாம். அவர் சந்திரமுகி போல காட்சியளித்தாராம்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் பயத்தில் உறைந்தனர். பின்னர் இயக்குனர், நடிகையை வைத்தியசாலைக்கு கொண்டிசென்றார். கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தை சந்திரசேகரன், சேதுராமன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக தயாரிக்கின்றனர்.


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

ஏலம் விடப்பட்ட எந்திரன் டிக்கெட்.

எந்திரனின் முதலாவது ஷோவின் முதலாவது டிக்கெட் ஏலம் விடப்பட்டது. இது நடந்தது, தமிழ் நாட்டின் அரியலூரில். இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான இந்த நிகழ்வு, எந்திரனின் மதிப்பை இன்னும் கூட்டுகிறது. வழமையாக ஒரு டிக்கெட் ரூபா 100 தொடக்கம் 200 வரைக்கும் விற்கப்படும். ஆனால் இந்த ஏலத்தில் எந்திரனின் முதலாவது டிக்கெட் ரூபா 3000 இற்கு விற்கப்பட்டுள்ளது.

திரையரங்கின் முதலாளி கார்த்திக், ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்திருக்கிறார். அவரின் மனதில் உதித்தது IPL ஏலம். அதனை அடிப்படையாக வைத்து, தனது திரையரங்கின் முதல் காட்சியின் முதலாவது டிக்கெட்டை ஏலம் விட்டிருக்கிறார்.

ரஜினிகாந்தின் படங்களுக்கே இவ்வாறெல்லாம் நடைபெற முடியும்.

Read this story in English :

Endhiran ticket auctioned.


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

தயாரிப்பாளராகிறாரா அஜித்?

அஜித் தயாரிப்பாளராகும் ஆசையில் இருப்பதாக தெரிகிறது. அஜித்தின் தயாரிப்பு நிறுவனம், GoodWill Entertainment என அழைக்கப்படும் என தெரிகிறது. அஜித்தின் இந்த தயாரிப்பு முயற்சி பற்றி கேட்டதற்கு, அஜித் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு பதிலளித்திருக்கிறார்.

அஜித்தினது தயாரிப்பு நிறுவனம் அவரின் படங்களைத் தயாரிப்பதுடன் அவரின் நண்பர்களையும் நடிகர்களாக்கப் போகிறதாம். விஜயின் படங்களை தயாரிக்கும் எண்ணம் உண்டா என கேட்டதற்கு அஜித் சொன்ன பதில், அதுபற்றி நிச்சயமாக சிந்திப்பேன்.

அஜித் தற்போது சில திரைப்படங்களுக்கான கதைகளை விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

எந்திரன் விமர்சனம்

முதலாம் திகதி வெளிவரும் என கூறப்பட்ட எந்திரன் திரைப்படம் சில திரையரங்குகளில் முதல் நாளே திரையிடப்பட்டது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலர் எந்திரன் படத்தின் விமர்சனங்களை எழுதுகிறார்கள். நானும் விடுவானேன்?

தயாநிதிமாறன் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் எந்திரன் வெளிவந்திருக்கிறது. என்திரனில் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாஸ், சந்தானம் மற்றும் பலரும் படத்தில் உள்ளனர். சரி கதைக்கு வருவோம்.

எதிர் பார்த்த படியே எந்திரன் சூப்பர். சுஜாதாவின் திரைக்கதையும், வசனமும் படத்தின் பலம். தன் கடைசி பங்களிப்பை மிக சரியாக செய்திருக்கிறார்.

இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு படம் நீள்கிறது. இருந்தாலும் விறுவிறுப்பாக திரைக் கதையை நகர்த்திய சங்கருக்கு பாராட்டுக்கள். 

சூப்பர் ஸ்டாரின் அறிமுகம் பஞ்ச் வசனங்கள் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இன்றி ரஜினி ரசிகர்களை ஏமாற்றினாலும் இது தமிழ் சினிமாவிற்கு ஓர் முன்னேற்றம்தான். சிட்டி எனும் ரோபோவாகவும் வில்லன் ரோபோவாகவும் ரஜினிகாந்த் அசத்துகிறார். சிட்டி ரோபோவில் ரஜினிகாந்த் நகைச்சுவையில் கருணாசையும் சந்தானத்தையும் விஞ்சுகிறார்.

ஐஸ்வர்யா ராய் ஏந்திரனில் அழகுப் பதுமை. நடிப்பிலும் அசத்துகிறார். ரோபோ ரஜினிகாந்தை ஐஸ்வர்யா ராய் கிஸ் பண்ணும்போது திரையரங்கு அதிர்கிறது.

பாடல்கள் அனைத்தும் சூப்பர். பாடல்களின் பின்னணியை இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத இடங்களை காட்டுகிறார்கள். ரஹ்மானின் இசையில் திரையரங்கு அதிர்கிறது. இருந்தாலும் ரசிகர்களின் அட்டகாசத்தால் பின்னணி இசையை சரியாக கேட்க முடியவில்லை. இதற்காகவேனும் இன்னொரு தடவை எந்திரன் பார்க்க வேண்டும்.

கருணாஸ், சந்தானம் நகைச்சுவையில் கலக்கியிருகிரார்கள். மொத்தத்தில் படத்தில் தோன்றும் பாத்திரங்கள் நன்றாக செய்திருகிறார்கள்.

படத்தின் கதையை முழுவதுமாக சொன்னால், வாசிக்கும் உங்களுக்கு படம் பார்க்கும் பொது அவ்வளவு நன்றாக இருக்காது. எனவே படத்தின் கதையை நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டாயமாக பார்க்க வேண்டிய படம். குழந்தைகளுக்கும் ஏற்றது.


Read Endhiran review in English >>

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

துபாய் இல் சூப்பர் ஹிட் ஆன எந்திரன்.

Endhiran Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் இன்று இந்திய தேசமெங்கும் திரைக்கு வரவிருக்கும் எந்திரன் படம் துபாய் இல் முதல் நாள் மாலையே திரையிடப்பட்டது. துபாய் ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் படம் பார்க்க வந்திருந்தனர். அவர்களில் சிலர் ரோபோ போல உடையணிந்திருந்தனர்.


தமிழ் சினிமாவில் இது போல ஒரு படம் வருமா என்பது கேழ்விக்குறியாக இருந்ததாகவும், எந்திரன் படம் தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருவதாகவும் ரசிகர்கள் கூறினார்.

அமெரிக்காவிலும் எந்திரன் சூப்பர் ஹிட் ஆகும் என்று கூறப்படுகிறது. New York இலுள்ள Jackson Heights என்ற திரையரங்கில் சிறிய நேரத்தினுள் ஒரு கிழமைக்கு உரிய டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் Indeana விலுள்ள I-Max திரையரங்கில் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக எந்திரன் படம் திரையிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Tuesday, September 28, 2010

எந்திரன் பிரிமியர் ஷோ.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் ரஹ்மானின் இசையமைப்பில் சங்கரின் தயாரிப்பில் தயாராகி வெளிவரவிருக்கிறது எந்திரன் திரைப்படம். ஆக்டோபர் முதலாம் திகதி திரைக்கு வரவிருக்கும் எந்திரன் படத்திற்கு பிரிமியர் ஷோ இருக்காது என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. புதிய படங்கள் வெளியிடப்படும் பொது நடிக நடிகைகளுக்காக பிரிமியர் ஷோ வைப்பது வழமை. எனினும் சன் பிக்சர்ஸ் இந்த வழமையை மாற்ற விளைந்தது.


Endhiran

இருந்தாலும் பல நடிக நடிகைகளின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது பிரிமியர் ஷோ இற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வழமை போல படம் வெளியிடுவதற்கு முதல் நாள் இரவு ஷோவாக இல்லாமல் எந்திரன் வெளியிடும் நாளான முதலாம் திகதியே இந்த ஷோ நடைபெறவுள்ளது.

பிரிமியர் ஷோவ்விற்காக சத்யம் தியேட்டர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியிலுள்ள ஏனைய தியேட்டர்கள் நடிக, நடிகைகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Monday, September 27, 2010

மாயாஜாலில் கார்த்தி - தமன்னா ஜோடி

கார்த்தி சிவப்பு சேர்ட் மற்றும் நீல காட்சட்டையுடனும் தமன்னா வெள்ளை நிற ஆடையுடனும் மாயாஜாலில் ஜோடியாக காணப்பட்டனர். சிறுத்தை படத்திற்காக.

Siruthai - Karthi and Thamanna

கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் ஜோடியாக நடித்து அண்மையில் வெளிவந்த படம் பையா நன்றாக ஓடியது. இப்போது இருவரும் சிறுத்தை படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். சிறுத்தை படப்பிடிப்பு மாயாஜாலில் நடைபெறுகிறது. அங்கேயே இருவரும் ஜோடியாக காணப்பட்டனர்.

பைய படத்திற்கு பின்னர் இருவரும் காதலில் விழுந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியிருந்தது ஞாபகத்திலிருக்கலாம். எனினும், இப்போது இருவரும் ஜோடியாக மாயாஜாலில் காணப்பட்டது படப்பிடிப்பிற்காக மட்டுமே...

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

ரஜினிகாந்த் : ஐஸ்வர்யா ராய் >> 40 : 1

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருக்கும் எந்திரன் படம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படவிருப்பது அறிந்ததே. எந்திரன் படத்தின் முதலாவது படப்பிடிப்பை ரஜனிகாந்த் ஆச்சர்யத்துடன் பகிர்ந்து கொண்டார்.

Endhiran

இயக்குனர் சங்கரும் நடன யோக்குனர் ராஜு சுந்தரமும் ஒரு கஷ்டமான நடன அசைவை கொடுத்தனராம். ரஜினிக்கு அது கஷ்டமாக இருந்ததால் 40 தடவைக்கு மேல் அவர் நடித்துப் பார்த்தாராம். எனினும் ஐஸ்வர்யா ராய் வந்தவுடன் அவரிடம் அந்த நாடின அசைவை நடித்துக் காட்டும்படி கேட்டபோது முதல் தடவையிலேயே சரியாக நடித்தாராம்.

ஐஸ்வர்யா ராயால் எவ்வாறு ஒரு தரத்திலேயே நடிக்க முடிந்தது என ஆச்சர்யப்பட்ட ரஜினிகாந்த், அவரை பாராட்டியிருக்கிறார்.

60 இற்கும் 33 இற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்.


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Colosseum தியேட்டர் இல் எந்திரன்.

உலகப்பிரசித்தி பெற்ற Colosseum திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தை திரையிடவுள்ளனர். இத்திரையரங்கில் ஒரு வேற்று மொழி படம் திரையிடப் படுவது இதுவே முதல் தடவை. இத்திரை அரங்கானது நோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்துள்ளது. நோர்வேயில் எந்திரனை வெளியிடும் நாளில் எந்திரன் இங்கு திரையிடப்படும். இந்த திரையரங்கானது Avatar மற்றும் Matrix படங்களையும் திரையிட்டுள்ளது.

Endhiran Rajinikanth and Aishwarya Rai

VN Music Dreams மற்றும் Abirami Cash and Carry ஆகிய நிறுவனங்களின் முயற்சியால் எந்திரன் இந்த கௌரவத்தைப் பெறுகிறான். VN Music Dreams சார்பாக பேசிய வசீகரன் சிவலிங்கம் தெரிவித்ததாவது, வழக்கமாக இந்த திரையரங்கு 700 ஆசனங்களையே கொண்டது. எனினும் எந்திரனுக்காக 925 ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எந்திரனின் முதலாவது காட்சி இங்கு திரையிடப்பட்ட பின்னர் 300 ஆசனங்களைக் கொண்ட திரையரங்கிற்கு எந்திரன் மாற்றப்படும். 75% ஆன டிக்கெட்கள் மிகச் சிறிய நேரத்திலேயே விற்கப்பட்டுவிட்டன.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Aishwarya Rai HQ wallpaper - 1366x768px

Aishwarya Rai high quality wallpaper for 1366x768 pixels
Cute high quality wallpaper of Aishwarya Rai for 1366x768 pixels resolution.

How to download this wallpaper?
        Click on the image to enlarge it
        Now, Right click on the wallpaper and save it.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Bhavana's high quality wallpaper (1366x768px)

Bhavana Wallpaper - 1366x768 pixels

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Thursday, September 16, 2010

ஜெனிலியாவின் புதிய HQ wallpaper 1024x768

ஜெனிலியா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஜெனிலியாவின் புதிய HQ wallpaper இங்கே இணைக்கப்படுகிறது. Download செய்ய, படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்.


genelia_latest_2010-1024x768-wallpaper


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Friday, September 3, 2010

சௌந்தர்யா ரஜினிகாந்த் - அஷ்வின் ராம்குமார் திருமணம்.


சௌந்தர்யா ரஜினிகாந்த் - அஷ்வின் ராம்குமார் திருமணத்தில் எடுக்கப் பட்ட படங்களில் சில இதோ :

Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo
Soundarya-Rajinikanth-Ashwin-Ramkumar-wedding-photo

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Related Posts Plugin for WordPress, Blogger...