Friday, November 19, 2010

காவலன் இயக்குனருடன் விஜய்க்கு என்ன பிரச்சனை?

காவலன் இயக்குனருடன் விஜய்க்கு ஒரு பிரச்சனை இருந்ததாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது. காவலன் படத்தை சித்திக் இயக்குகிறார். விஜய் மற்றும் அசின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

காவலன் படத்திற்காக வித்தியாசாகர் ஒரு மெல்லிசைப் பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடல் படத்தின் முடிவிற்கு சிறிது நேரத்தின் முன் வரவேண்டும் என இயக்குனர் விரும்பினாராம். ஆனால் விஜயோ அந்த இடத்தில் ஒரு குத்துப் பாடல் வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார்.

இவர்கள் சண்டையில் கடுப்பாகிப் போன எடிட்டர், அந்த இடத்தி பாடல் எதுவும் தேவையில்லை எனக் கூறிவிட்டார். இருந்தாலும் பூனேயின் மலையடிவாரத்தில் ஒரு மெல்லிசை பாடலின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

எனினும், இப்பாடல் காவலன் படத்தின் எந்த இடத்தில் வரும் என கூற படக் குழுவினர் மறுத்துவிட்டனராம்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...