Tuesday, November 16, 2010

தமிழ் படிக்கும் 'தமிழ் படம்' நாயகி திஷா பண்டே

தமிழ் படம் மூலம் தமிழில் அறிமுகமான திஷா பண்டே தற்போது மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் மோட்சம் எனும் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். திஷா தற்போது ஆர்வமாக தமிழ் படிக்கிறார்.

ஒரு நாளைக்கு பத்து தமிழ் சொற்கள் மனப் பாடம் செய்வதாக கூறும் திஷா ஆறு மாதத்தில் தன்னால் நன்றாக தமிழில் பேசக் கூடியதாக இருக்குமென்றும், நீங்கள் ஒரு புதிய தமிழ் நடிகையை பெறப்போகிறீர்கள் என்றும் கூறும் இவர், தனக்கு பிடித்த இடம் சென்னை என்கிறார்.

ராஜஸ்தான் மற்றும் மும்பையை காட்டிலும் சென்னையை கூடப் பிட்டிக்கும் எனக் கூறும் திஷா, தாவணி மற்றும் சேலையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இப்படி நடித்தால் தமிழ் நாட்டு மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடிக்கலாம் என யாரோ கதை கட்டி விட்டார்கள் போலிருக்கிறது.

தகவல் மூலம் (ஆங்கிலத்தில்) : HAPPY READING
திஷா பண்டே இன் படங்கள் : இங்கே அழுத்தவும்.
திஷா பண்டே இன் wallpapers (1024x768) : இங்கே.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...