Friday, November 19, 2010

சபாஷ் சரியான போட்டி

வேணு அரவிந்த் 
தமிழில் தயாரிக்கப் பட இருக்கும் புதிய படமொன்றின் பெயர் சபாஷ் சரியான போட்டி. இதனை வேணு அரவிந்த் இயக்குகிறார். இப்படம் பற்றி வேணு சொன்னதாவது, இக்காலத்தில் ஒருவனின் துக்கத்தில் இன்னொருவன் சந்தோசமடைகிறான். இதனை அடிப்படையாக வைத்தே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு காமெடி படமாக இருக்கும்.

சபாஷ் சரியான போட்டி படத்தின் நாயகி தம்புராட்டி பற்றி வேணு சொன்னதாவது, அவர் ஒரு கட்டடக் கலை நிபுணி. அத்துடன் ஒரு விளம்பர நடிகையும் கூட. அவருக்கு தமிழ் தெரியாது. எனவே வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி கொடுக்கிறோம். அவர் ஒரு கவர்ச்சிக் கன்னி கிடையாது. ஆனால் அவரின் முகம் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்பதால் அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறோம். அவர் ஒரு கதை நாயகியாக இருப்பார்.

படத்தின் நாயகன் ஜெயராம் மணி பற்றி சொன்னதாவது, அவர் அண்மையில் தமிழ் பெண்கள் பற்றி சொன்ன கருத்துகளால் இந்தப் படத்திற்கு பாதிப்பு வருமா என பலரும் கேட்கின்றனர். ஆனால் எந்தப் பாதிப்பும் வராது. ஏனெனில் அவருக்கு பிரச்னையை ஏற்படுத்தியவர்கள் தமிழ் சினிமாகாரர்கள் அல்ல. எனவே, எந்தப் பாதிப்பும் இல்லை. அவரிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டார்கள். பகிடியாக அவர் சொன்னதை பெரிது படுத்தி விட்டார்கள். அப்படிச் செய்திருக்கக் கூடாது.

சபாஷ் சரியான போட்டி படம் உங்கள் பிரச்சனைகளை மறந்து சிரிப்பதற்காக மட்டுமே எனவும் கூறினார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...