Thursday, August 5, 2010

24 Sep இல் எந்திரன் திரைக்கு வருகிறான்

Rajinikanth - Endhiran
ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தயாராகிவரும் எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் 24 ம் திகதி திரைக்கு வரவிருப்பதாக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளன. இத்திரைப்படம் எதிர்வரும் 3 ம் திகதி வெளியிடப்படவிருந்தது. எனினும் கடைசி நிமிட திருத்தங்கள் காரணமாகவும், படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு நேரமின்மை காரணமாகவும் வெளியிடும் திகதி தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட எந்திரன் பாடல்களும் ஏற்கனவே வெளிவந்திருந்த எந்திரன் படத்தின் சில படங்களும், எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கின்றன. ரஜினிகாந்தின் இன்னுமொரு வெற்றிப்படமாக இது அமையுமென நம்பலாம்.

மனிதனின் இயல்புகளைக் கொண்டதாக விஞ்ஞானி ஒருவரால் உருவாக்கப்படும் ரோபோ, விஞ்ஞானியின் கட்டுப்பாட்டை மீறுகிறது. பின்னர் என்ன நடந்தது என்பதும் ரோபோவை எவ்வாறு கட்டுப்படுத்தினர் என்பதுமே படத்தின் கதை என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாகவே உள்ளது. எந்திரன் வெளிவரும் வரை காத்திருப்போம்...

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...