Wednesday, August 11, 2010

எந்திரன் விநியோக உரிமை சர்ச்சையில்...?

Endhiran Rajini
சன் பிக்சர்ஸ் இன் தயாரிப்பில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் எந்திரன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பின் விநியோக உரிமையை களவாக விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சுரேந்திரன் (44) மற்றும் உதயகுமார் (46) ஆகிய இருவருமே பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்களாவர்.


திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பில்ம்ஸ் இற்கு இவர்கள், எந்திரனின் தெலுங்கு விநியோக உரிமையை பொய்யான ஆவணங்கள் காட்டி ரூ. 27 கோடிக்கு விற்றதுடன் ரூ. 2 கோடியை முன்தொகையாக பெற்றுமுள்ளனர்.

இந்த தகவல் சன் பிக்சர்ஸ் இற்கு தெரிய வந்ததையடுத்து, அவர்கள் சென்னையிலுள்ள பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதேயடுத்தே குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிடமிருந்தும் பொலிசார் சில போலியான ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக கூறிய சன் பிக்சர்ஸ் நிறுவனம், தாங்கள் எந்திரனின் எந்த மொழிக்குமுரிய விநியோக உரிமையை யாருக்கும் விற்கவில்லை என தெளிவுபடுத்தினர்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...