நடிகர் கமல்ஹாசன் இந்தியாவின் 64 வது சுதந்திர தினத்தை தனது சென்னை அலுவலகத்தில் ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனினால் சேலைகள், தையல் இயந்திரங்கள், முச்சக்கர வண்டில்கள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் சுத்தமாக்கும் கருவி என்பன வழங்கப்பட்டன.
இவ் உதவிகள் அனைத்தும் கமலின் ரசிகர்களினால் சேகரிக்கப்பட்டிருந்தன. சுத்தமாக்கும் கருவியை கிருஷ்ணகிரி மாவட்ட ரசிகர்கள் வழங்கினர். குளிர் சாதனப் பெட்டியை கர்நாடகா ரசிகர்கள் வழங்கியிருந்தனர். பாண்டிச்சேரி ரசிகர்கள் இருவருக்கு தலா 15000 ரூபாவை அவர்களது இதய சத்திர சிகிச்சைக்காக வழங்கினர்.
வடக்கு மதுரை ரசிகர்கள் ரூபா 10000 தை இரு மாணவர்களுக்கும் ராசிபுரம் ரசிகர்கள் 330 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கியதுடன் திருநெல்வேலி ரசிகர்கள் ஜாஸ்மின் எனும் மாணவிக்கு அவரது உயர் கல்விக்காக ரூபா 10000 ௦௦௦௦ தையும் வழங்கினர்.
No comments:
Post a Comment