![]() |
| Endhitan - Rajini - Aish |
அவ்வளவு சுலபமில்லை. இந்தியாவின் 28 மாநிலங்களில் 27 இல் உள்ள மக்களால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு மொழியில் எடுக்கப்படும் படம், இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை காண்பது மிகவும் கடினமான விடயம். மொழி மட்டுமல்ல, கலாச்சாரமும் இந்தியாவின் பிரதான கலாச்சாரத்துடன் பெரிதும் வேறுபடுகிறது (உதாரணம் ராவணன்). எனினும், எந்திரன் தமிழ் நாட்டிலும் அதனைச் சூழவுள்ள சில பிரதேசங்களிலும் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியை அடையும்.
தற்போது தமிழர்கள் வேறு மாநிலங்களிலும் பரந்துள்ளனர் எனினும், தோல்வியடைந்த ஹிந்தி ராவன், வெற்றிப்படமென அறிவிக்கப்பட்ட தமிழ் ராவணனிலும் பார்க்க கூடிய வருமானத்தை பெற்றதுடன் உலகளவிலும் ராவணனிலும் பார்க்க விஞ்சிவிட்டது. மொழி மற்றும் கலாச்சாரம் காரணமாக இந்தியாவின் மிகப் பெரிய ஹிட் படங்களாக ஹிந்தி படங்களே இலகுவில் வருகின்றன.
ஹிந்தி படமான Dabangg வெளிவரும் நேரத்திலேயே இந்திரனும் வெளிவர இருப்பதால், Dabangg வெற்றி பெற்றால், இந்திய அளவில் எந்திரன் பேசப்படுவது சாத்தியமற்றதாகலாம். இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டுமாயின், எந்திரன் மிகப் பிரமாதமாக இருக்க வேண்டும்.
என்திரனில் ரஜினிகாந்துடன், ஐஸ்வர்யா ராயும் நடித்திருப்பதால் ஹிந்தி ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்கலாம்.
![]() |
| Endhiran Robo |







No comments:
Post a Comment