![]() |
| Pesuvathu Kiliyaa |
கரகாட்டம், மயிலாட்டம், ஒய்லாட்டதுடன் விநாயகமூர்த்தியின் குரலில் "வந்தவரை வாழவைக்கும் தமிழகம்..." என்ற பாடலுடன் ஆரம்பிக்கும் திரைப்படம் (?) எதை எதை எல்லாமோ சொல்லி கடைசியில் "நட்பே காதலைவிட சிறந்தது' எனச் சொல்லி படம் முடிகிறது. கூடவே, பெற்றோரின் அரவணைப்பிலேயே பிள்ளைகளை வளர்க்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
![]() |
| Pesuvathu Kiliya |
காதலை இழந்தாலும் நட்பை இழக்கக் கூடாது எனும் கருத்தைச் சுற்றியே கதை நகர்கிறது. சக்தி, தர்சினி, சிவா மூவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். சிவா மீது தர்சினிக்கு காதல். ஆனால் சிவா காதலிக்கவில்லை. சிவாவும் சக்தியும் நல்ல நண்பர்கள். எனினும் காதல் இல்லை.
சக்தியின் பெற்றோர் பணக்காரர்கள். பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காததால் சக்தி போதை மருந்து பாவனைக்கு அடிமையாகிறாள். சிவா அவளை காப்பற்றுகின்றான். இதனால் சக்தி சிவாவுடன் இன்னும் நெருக்கமாகிறாள்.
![]() |
| Pesuvathu Kiliya |
சக்திக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது. ஏனெனில் அவள்தான் போதைமருந்து பாவித்தவளையிற்றே... அப்போது தொற்றிவிட்டது. ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக கிடக்கும் சக்தியை சிவாவும் தர்சினியும் சேர்ந்து கவனித்துக்கொள்கிறார்கள். தன்னைப் பார்க்க வரும் பெற்றோரை சக்தி புறக்கணிக்கிறாள்.
என்னதான் செய்தலும் எய்ட்ஸ் வந்தால் தப்ப முடியுமா? நம்ம ஹீரோயின் இறந்துவிடுகிறாள். பெற்றோரின் அரவணைப்பில் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்றும் காதலை விட நட்பே சிறந்தது என்றும் சொல்லி படம் முடிகிறது.
![]() |
| Pesuvathu Kiliya Sakeela |
படத்தில் யாருமே நடிக்கவில்லை, ஒருவரைத் தவிர. அது, நம்ம சகீலா. இரண்டே காட்சிகள் தான் என்றாலும் நடித்துவிட்டு போகிறார். மற்றவர்கள் ஏனோ தானோதான். பின்னணி இசை... சொல்லி வேலையில்லை... அவ்வளவு மோசம்.
புதுமுக ஹீரோ ஹீரோயின்கள். அவர்கள் அழும்போது நம்மையும் அழவைக்கிறார்கள். ஹீரோ "ஏம்மா அழுகிற?" என்று கேட்டபின்புதான் தெரிகிறது ஹீரோயின் அழுகிறார் என்று. படத்தில் ஒன்று தோத்தாலும் கூட இன்னொன்றாவது வெல்லட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை, பல கதைகளை கலந்து கூழாம் பாணியாக்கியிருக்கிரார்கள். போதாக்குறைக்கு சமூக கண்ணோட்டங்கள் வேறு..
போதை மருந்தை உள்கொள்ளக்கூடாது.
எய்ட்ஸ் நோய் பற்றி மக்களிடம் சொல்ல வேண்டும்.
எய்ட்ஸ் நோயாளிகளை புறக்கணிக்காதீர். அவர்களை அரவணைக்க வேண்டும்.
வெட்டியான் வாழ்க்கையையும் காட்டுகிறார்கள்.
கேப்பங்க்கூழ் குடிப்பது உடம்புக்கு நல்லது.
திருநங்கைகளும் மனிதர்களே. அவர்களையும் அரவணைக்க வேண்டும் என்பதை நிஜமான திருநங்கை பிரியா பாபுவை வைத்தே சொல்லியிருக்கிறார்கள்.
![]() |
| Pesuvathu Kiliya |
படத்தில் கதை அங்கும் இங்குமாக அலை பாய்கிறது. எப்படித்தான் அவர்களே பார்த்திருப்பார்களோ தெரியவில்லை.
சுத்த மோசம்.
நானும் படத்தில் நடிக்கப் போகிறேன்.... !!!
Click here to view the Gallery.










No comments:
Post a Comment