அண்மையில் கேரளா செய்தி நிறுவனம் ஒன்றுடன் நடந்த கலந்துரையாடலில் நடிகர் கமல் ஹாசன் கூறியதாவது, "என் சினிமா வாழ்க்கையில் 50 வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் இன்னும் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. எனது நண்பன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நான் பெருமைப்பட இதுவும் ஒரு காரணம், ஏனெனில் நானும் ஒரு தமிழன்".
 |
| Ulakanayakan kamal haasan |
மேலும் கூறியதாவது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு வந்ததில்லை. ஸ்ரீதேவியை என்னால் மறக்க முடியாது. அவர் என்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அந்தக் காலங்களில் நாங்கள் இருவரும் காதலிப்பதாகக்கூட செய்திகள் வெளிவந்திருந்தன.
நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகக்கூட செய்திகள் வெளிவந்தன. ஸ்ரீதேவியின் தாயாரும் இதையே நினைத்திருந்தார். எனினும் உண்மை அதுவல்ல. என்னைப் பற்றி ஸ்ரீதேவி என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியாது. நாங்கள் இருவரும் இன்னுமொரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என பலர் எண்ணுகிறார்கள்.
ஸ்ரீதேவி இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று முதலில் எனக்கு தெரிய வேண்டும். அப்போதிருந்து இப்பவும் அவர் என்னை சார் என்றுதான் அழைப்பார். சிறிதளவேனும் மாறவில்லை.
 |
| Sridevi |
ஒரு தடவை நான் ஒரு இயக்குனருக்குப் பக்கத்தில் இருந்தேன். என்னுடன் ஒரு புது நடிகர் நடிக்கவிருப்பதாக எனக்கு அவர் கூறினார். அந்தப் புதுமுக நடிகர் ஒரு சினிமா பாடசாலை மாணவர் எனவும் அவருக்கு கராதே தெரியும் என்றும் கூறினார். நான் அவருடைய பெயர் என்னவென கேட்டேன். மலையாள பெயர் ஒன்றை சொன்னார். அந்த நடிகர் ரஜினிகாந்த்.
எனக்கு ராஜன் எனும் பெயரில் ஒரு நண்பன் இருந்தான். அவன் பிரெஞ்சு தாடி வைத்திருந்தான். ரஜினிகாந்தும் பிரெஞ்சு தாடி வைத்திருந்தார். ராஜனுக்கு கான்சர் இருந்ததால் அந்தப்படம் வெளிவந்து சிறிது காலத்தின் பின்னர் அவன் இறந்துவிட்டான். ரஜினிகாந்த், தன்னுடைய தாடி எனக்கு ராஜனை நினைவுபடுத்தியதால் அதனை எடுத்துவிட்டார். இப்போது ராஜனைப் போலவே ரஜினி எனது உற்ற நண்பன். இவ்வாறு உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment