Tuesday, August 17, 2010

இயக்குனர் சங்கரின் பிறந்த நாள் இன்று.

Director Shankar


இயக்குனர் சங்கர் தனது பிறந்தநாளை இன்று (17.08.2010) கொண்டாடுகிறார். 1993 இல் ஜென்டில்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமான சங்கர், பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். அவரது மகா ஹிட் படங்களாக, ஜென்டில்மன், இந்தியன், காதலன் மற்றும் சிவாஜி என்பவற்றை கூறலாம். தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தி மெகா பட்ஜெட் இல் படம் எடுப்பவர் எனும் பெயர் சங்கருக்கு உண்டு.

Advertisements :
Director Shankar
Yuvan Shankar Raja songs
Balu mahendra films
Selvaragavan Films
Tamil cinema hot actress
சங்கரின் இந்த வருட பிறந்தநாளில் அவர் மிக மகிழ்ச்சியாக இருப்பார். ஏனெனில், சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் எந்திரன் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. எந்திரன் படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. இதுவும் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இயக்குனராக மட்டுமல்லாமல் சங்கர் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல படங்கள் வெற்றி நடை போட்டுள்ளன. இந்நிறுவனத்தின் அண்மைய வெளியீடுகளாக ஈரம் மற்றும் ஆனந்தபுரத்து வீடு என்பவற்றை குறிப்பிடலாம்.

Endhiran director Shankar


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...