 |
| Neethu Chandra (நீத்து சந்திரா) |
"நடிகர் நாகர்ஜுனாவுடன் நடிக்க எனக்கு பிடிக்கும். நிறைய வாய்ப்புகள் வந்து அவை தவறிப் போய்விட்டன. எனினும் இந்த தமிழ் படத்தில் நடிப்பதன் அவருடன் நடிப்பதன் மூலம் நான் சந்தோசமடைகிறேன்" இவ்வாறு தமிழ் படமான மங்காத்தாவில் நாகர்ஜுனாவுடன் நடிக்கும் நீத்து சந்திரா கூறினார். அஜித்தின் 50 வது படமான மங்காத்தாவில் நாகர்ஜுனா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடிக்கிறார்.
நீத்து சந்திர, யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் தீராத விளையாட்டுப் பிள்ளையில் நடித்தார். அண்மையில் யுத்தம் செய் எனும் படத்திலும் நடித்திருந்தார். நீத்து சந்திரா நடித்துள்ள தமிழ் படங்களின் எண்ணிக்கை குறைவாகவிருந்தாலும் தமிழ் சினிமாவில் அவர் ஒரு இடத்தைப் பிடித்து முன்னேறி வருகிறார்.
No comments:
Post a Comment