நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாக்கும் வருகிற 24ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற நேரம் கூடிவந்துள்ளது. போனிவர்மா ஏராளமான பாலிவுட் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரிந்தவர். நீண்ட நாட்களகவே போனிவர்மாவும், பிரகாஷ் ராஜும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
 |
| Prakash Raj |
இந்நிலையில் இவர்கள் திருமணம் வரும் 24ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நெருக்கமானவர்கள் மட்டும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இது பற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது :
 |
| Pony Varma |
"எங்களது திருமணம் வருகிற 24ம் தேதி மும்பையில் நடக்கிறது. அதன்பிறகு நானும், போனிவர்மாவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் நண்பர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே விருந்து நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.எங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்தவில்லை. அனைவரது ஆசீர்வாதத்துடனும், ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் எங்களது திருமணம் நடைபெறும்" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.
பிரகாஷ் ராஜ் முன்னதாக லத்திகா குமாரி என்பவரை திருமணம் செய்திருந்தார். எனினும் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டார். பிரகாஷ் ராஜிற்கு இரண்டு மகள்மார் உள்ளனர்.
No comments:
Post a Comment