Monday, September 27, 2010

Colosseum தியேட்டர் இல் எந்திரன்.

உலகப்பிரசித்தி பெற்ற Colosseum திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தை திரையிடவுள்ளனர். இத்திரையரங்கில் ஒரு வேற்று மொழி படம் திரையிடப் படுவது இதுவே முதல் தடவை. இத்திரை அரங்கானது நோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்துள்ளது. நோர்வேயில் எந்திரனை வெளியிடும் நாளில் எந்திரன் இங்கு திரையிடப்படும். இந்த திரையரங்கானது Avatar மற்றும் Matrix படங்களையும் திரையிட்டுள்ளது.

Endhiran Rajinikanth and Aishwarya Rai

VN Music Dreams மற்றும் Abirami Cash and Carry ஆகிய நிறுவனங்களின் முயற்சியால் எந்திரன் இந்த கௌரவத்தைப் பெறுகிறான். VN Music Dreams சார்பாக பேசிய வசீகரன் சிவலிங்கம் தெரிவித்ததாவது, வழக்கமாக இந்த திரையரங்கு 700 ஆசனங்களையே கொண்டது. எனினும் எந்திரனுக்காக 925 ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எந்திரனின் முதலாவது காட்சி இங்கு திரையிடப்பட்ட பின்னர் 300 ஆசனங்களைக் கொண்ட திரையரங்கிற்கு எந்திரன் மாற்றப்படும். 75% ஆன டிக்கெட்கள் மிகச் சிறிய நேரத்திலேயே விற்கப்பட்டுவிட்டன.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...