![]() |
| Endhiran Rajinikanth |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் இன்று இந்திய தேசமெங்கும் திரைக்கு வரவிருக்கும் எந்திரன் படம் துபாய் இல் முதல் நாள் மாலையே திரையிடப்பட்டது. துபாய் ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் படம் பார்க்க வந்திருந்தனர். அவர்களில் சிலர் ரோபோ போல உடையணிந்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் இது போல ஒரு படம் வருமா என்பது கேழ்விக்குறியாக இருந்ததாகவும், எந்திரன் படம் தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருவதாகவும் ரசிகர்கள் கூறினார்.
அமெரிக்காவிலும் எந்திரன் சூப்பர் ஹிட் ஆகும் என்று கூறப்படுகிறது. New York இலுள்ள Jackson Heights என்ற திரையரங்கில் சிறிய நேரத்தினுள் ஒரு கிழமைக்கு உரிய டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் Indeana விலுள்ள I-Max திரையரங்கில் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக எந்திரன் படம் திரையிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






No comments:
Post a Comment