சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் ரஹ்மானின் இசையமைப்பில் சங்கரின் தயாரிப்பில் தயாராகி வெளிவரவிருக்கிறது எந்திரன் திரைப்படம். ஆக்டோபர் முதலாம் திகதி திரைக்கு வரவிருக்கும் எந்திரன் படத்திற்கு பிரிமியர் ஷோ இருக்காது என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. புதிய படங்கள் வெளியிடப்படும் பொது நடிக நடிகைகளுக்காக பிரிமியர் ஷோ வைப்பது வழமை. எனினும் சன் பிக்சர்ஸ் இந்த வழமையை மாற்ற விளைந்தது.
 |
| Endhiran |
இருந்தாலும் பல நடிக நடிகைகளின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது பிரிமியர் ஷோ இற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வழமை போல படம் வெளியிடுவதற்கு முதல் நாள் இரவு ஷோவாக இல்லாமல் எந்திரன் வெளியிடும் நாளான முதலாம் திகதியே இந்த ஷோ நடைபெறவுள்ளது.
பிரிமியர் ஷோவ்விற்காக சத்யம் தியேட்டர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியிலுள்ள ஏனைய தியேட்டர்கள் நடிக, நடிகைகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment