Thursday, September 30, 2010

எந்திரன் விமர்சனம்

முதலாம் திகதி வெளிவரும் என கூறப்பட்ட எந்திரன் திரைப்படம் சில திரையரங்குகளில் முதல் நாளே திரையிடப்பட்டது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலர் எந்திரன் படத்தின் விமர்சனங்களை எழுதுகிறார்கள். நானும் விடுவானேன்?

தயாநிதிமாறன் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் எந்திரன் வெளிவந்திருக்கிறது. என்திரனில் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாஸ், சந்தானம் மற்றும் பலரும் படத்தில் உள்ளனர். சரி கதைக்கு வருவோம்.

எதிர் பார்த்த படியே எந்திரன் சூப்பர். சுஜாதாவின் திரைக்கதையும், வசனமும் படத்தின் பலம். தன் கடைசி பங்களிப்பை மிக சரியாக செய்திருக்கிறார்.

இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு படம் நீள்கிறது. இருந்தாலும் விறுவிறுப்பாக திரைக் கதையை நகர்த்திய சங்கருக்கு பாராட்டுக்கள். 

சூப்பர் ஸ்டாரின் அறிமுகம் பஞ்ச் வசனங்கள் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இன்றி ரஜினி ரசிகர்களை ஏமாற்றினாலும் இது தமிழ் சினிமாவிற்கு ஓர் முன்னேற்றம்தான். சிட்டி எனும் ரோபோவாகவும் வில்லன் ரோபோவாகவும் ரஜினிகாந்த் அசத்துகிறார். சிட்டி ரோபோவில் ரஜினிகாந்த் நகைச்சுவையில் கருணாசையும் சந்தானத்தையும் விஞ்சுகிறார்.

ஐஸ்வர்யா ராய் ஏந்திரனில் அழகுப் பதுமை. நடிப்பிலும் அசத்துகிறார். ரோபோ ரஜினிகாந்தை ஐஸ்வர்யா ராய் கிஸ் பண்ணும்போது திரையரங்கு அதிர்கிறது.

பாடல்கள் அனைத்தும் சூப்பர். பாடல்களின் பின்னணியை இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத இடங்களை காட்டுகிறார்கள். ரஹ்மானின் இசையில் திரையரங்கு அதிர்கிறது. இருந்தாலும் ரசிகர்களின் அட்டகாசத்தால் பின்னணி இசையை சரியாக கேட்க முடியவில்லை. இதற்காகவேனும் இன்னொரு தடவை எந்திரன் பார்க்க வேண்டும்.

கருணாஸ், சந்தானம் நகைச்சுவையில் கலக்கியிருகிரார்கள். மொத்தத்தில் படத்தில் தோன்றும் பாத்திரங்கள் நன்றாக செய்திருகிறார்கள்.

படத்தின் கதையை முழுவதுமாக சொன்னால், வாசிக்கும் உங்களுக்கு படம் பார்க்கும் பொது அவ்வளவு நன்றாக இருக்காது. எனவே படத்தின் கதையை நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டாயமாக பார்க்க வேண்டிய படம். குழந்தைகளுக்கும் ஏற்றது.


Read Endhiran review in English >>

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

2 comments:

  1. இன்னொரு ஏமாற்றவில்லை விமர்சனம் எந்திரன்
    http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html

    ReplyDelete
  2. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    by
    TS



    டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...