Friday, October 8, 2010

நயன்தாராவை கல்யாணம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது - பிரபு தேவா

ஊடகங்களுக்கு பிரபு தேவா தெரிவித்ததாவது, யாராலும் நான் நயன்தாராவை கல்யாணம் செய்வதை தடுக்க முடியாது. எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கிறது.

நயன்தாராவைப் பற்றி கதைப்பதற்கு இதுதான் சரியான நேரம். ஏனெனில் இன்னும் இரண்டு மாதங்களில் நாங்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளோம். திருமணத்தை எளிமையாக நடத்துவதா அல்லது பெரிதாக செய்வதா என இன்னமும் முடிவு செய்யவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்.

எமது திருமணத்திற்கு எதிராக இருக்கும் எவரைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை. எல்லாப் பிரச்சனைகளையும் சட்டப்படி சந்திப்பேன். நாங்கள் கல்யாணம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது.


இந்த விடயத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கும் எனது பெற்றோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராமலத்தைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...